Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

US உடனான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்: பியூஷ் கோயல்

US உடனான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்: பியூஷ் கோயல்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, சட்ட ரீதியான வரைவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கல்லூரி முதல்வர் சிம்ரித் கவுர் மற்றும்ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. தற்போது சட்ட ரீதியான வரைவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும்.

சர்வதேச அளவில் போட்டி நாடுகளைவிட இந்தியாவுக்கு அதிக நன்மைகளும், வணிகச் சலுகைகளும் கிடைக்கும்போது மட்டுமே இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதம் கையெழுத்தாகி, அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய வர்த்தகத் துறைச் செயலர் ராஜேஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் நிலவுகிறது.

அமெரிக்கா தற்போது செயல்படுத்தி வரும் புதிய வரி விதிப்பு முறைகள் முழுமையடையும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் மூலம் இந்திய உற்பத்திப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் முன்னுரிமை கிடைக்கும். சர்வதேச சந்தையைக் குலைக்கும் வகையில் சில நாடுகள் அளவுக்கு அதிகமாகப் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும் போக்கை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க சந்தையில் போட்டியிடும் பிற நாடுகளைவிட இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வணிகப் பாதுகாப்பும், நிலையான வரிக் குறைப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வரவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முந்தைய செய்தி
Goyal pitches India as Canadian industry hub
அடுத்த செய்தி
AI infra financing boom raises risk of private credit bubble

தொடர்புடைய செய்திகள்